சலிப்பு
அலையும் கடலும்
மலையும் யானையும்
வானமும் கலைந்து கலைந்து
இணையும் மேகங்களும்
ரயில் வண்டியும்
எத்தனை முறை
பார்த்தாலும் சலிப்பதே இல்லை.
எனக்கு
என் மனைவியும்
என் மகளும், மகனும் கூடத்தான்.
Sunday, November 21, 2010
Sunday, January 24, 2010
வாழ்க்கைச் சதுரங்கம்
கொஞ்சம் கொஞ்சமாய் நகரும் சிப்பாய்கள்
நேர் வழியில் செல்லும் யானைகள்
குறுக்கு வழியில் விரையும் மந்திரிகள்
நிறைய தந்திரமும்
சாமர்த்தியமுமாக தாவும் குதிரைகள்
எல்லாவற்றையும் முழுமையாக்கும் ராணி
எல்லாமும் என் ராஜாவைப்
பாதுகாப்பதற்குத்தான்… …
எதிரியின் பலம் கூடும் வரை!
Wednesday, January 20, 2010
தேர்த்திருவிழா

இன்று தேர்த்திருவிழா...
என்னென்னவோ எண்ணங்கள்
மனதைப் பின்னோக்கி ஓட்டிச்செல்ல...
சிறு வயதில் ஊரில் தேர்த்திருவிழா...
அரைநாள் லீவு கிடைக்கிற உற்சாகம்
தேர்பார்த்து தொட்டிழுக்கிற சந்தோஷம்
மிட்டாய் வாங்க காசு கிடைக்கும் சௌகர்யம்
பலூன்கள், பம்பரங்கள், பித்தர்கள்...
புத்தாடைகள்...
கொஞ்ச நாள் பின்
கூட்டம் பார்க்கிற மதமதப்பு...
சுதந்திரமாய் நெரிசலூடே
சுற்றித் திரிகிற பரபரப்பு...
தேரை இழுத்து கோஷம் போடும்
இளமையின் வீர்யம்...
இன்றும் ஊரில் தேர்த்திருவிழா...
நான் என் மகளுக்கு
பலூன் வாங்கித் தருகிற சந்தோஷத்துடன்...
Thursday, January 14, 2010
தேடல்
திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்து போன
குழந்தையைத் தேடுவது போல
நான்
இழந்து போன
சந்தோஷங்களைத் தேடுகிறேன்......
நானும் நீயும் துண்டைவிரித்து
மீன் பிடித்த சந்தோஷம்...
மிதிக்கமுடியாமல் சைக்கிளை மிதித்து
முள்செடியில் விழுந்த சந்தோஷம்...
பக்கத்து வீட்டுச் சுவரேறி
மாங்காய் அடித்த சந்தோஷம்...
கல்லூரியில் கட் அடித்து
சினிமா பார்த்த சந்தோஷம்...
வேலை கிடைத்த சந்தோஷம்...
இன்ன பிற சந்தோஷங்கள்.....
இப்ப
தேடுவதே சந்தோஷமாய்
தொடர்கிறது.....
தொலைந்து போன
குழந்தையைத் தேடுவது போல
நான்
இழந்து போன
சந்தோஷங்களைத் தேடுகிறேன்......
நானும் நீயும் துண்டைவிரித்து
மீன் பிடித்த சந்தோஷம்...
மிதிக்கமுடியாமல் சைக்கிளை மிதித்து
முள்செடியில் விழுந்த சந்தோஷம்...
பக்கத்து வீட்டுச் சுவரேறி
மாங்காய் அடித்த சந்தோஷம்...
கல்லூரியில் கட் அடித்து
சினிமா பார்த்த சந்தோஷம்...
வேலை கிடைத்த சந்தோஷம்...
இன்ன பிற சந்தோஷங்கள்.....
இப்ப
தேடுவதே சந்தோஷமாய்
தொடர்கிறது.....
Tuesday, January 5, 2010
தனிமை
தனிமை
கை நிறைய கடிதங்களோடும்
வாய் நிறைந்த சிரிப்போடும்
சைக்கிளை தள்ளியபடி
நடந்து வரும்
போஸ்ட்மேன் சுந்தரம் பிள்ளை
எல்லோருக்கும்
கடிதமோ பார்சலோ மணி ஆர்டரோ
கொடுத்து விட்டு... ...
எனக்கு... வெறும்
சிரிப்பு மட்டும்தான்.
Subscribe to:
Posts (Atom)