Sunday, January 24, 2010

வாழ்க்கைச் சதுரங்கம்

கொஞ்சம் கொஞ்சமாய் நகரும் சிப்பாய்கள்

நேர் வழியில் செல்லும் யானைகள்

குறுக்கு வழியில் விரையும் மந்திரிகள்

நிறைய தந்திரமும்

சாமர்த்தியமுமாக தாவும் குதிரைகள்

எல்லாவற்றையும் முழுமையாக்கும் ராணி

எல்லாமும் என் ராஜாவைப்

பாதுகாப்பதற்குத்தான்… …

எதிரியின் பலம் கூடும் வரை!

Wednesday, January 20, 2010

தேர்த்திருவிழா




இன்று தேர்த்திருவிழா...
என்னென்னவோ எண்ணங்கள்
மனதைப் பின்னோக்கி ஓட்டிச்செல்ல...

சிறு வயதில் ஊரில் தேர்த்திருவிழா...
அரைநாள் லீவு கிடைக்கிற உற்சாகம்

தேர்பார்த்து தொட்டிழுக்கிற சந்தோஷம்
மிட்டாய் வாங்க காசு கிடைக்கும் சௌகர்யம்
பலூன்கள், பம்பரங்கள், பித்தர்கள்...
புத்தாடைகள்...

கொஞ்ச நாள் பின்
கூட்டம் பார்க்கிற மதமதப்பு...
சுதந்திரமாய் நெரிசலூடே
சுற்றித் திரிகிற பரபரப்பு...

தேரை இழுத்து கோஷம் போடும்
இளமையின் வீர்யம்...

இன்றும் ஊரில் தேர்த்திருவிழா...
நான் என் மகளுக்கு
பலூன் வாங்கித் தருகிற சந்தோஷத்துடன்...