Friday, December 25, 2009

கேள்வி

மாப்பிள்ளை வீட்டில் நிறைய காலி இடம் உள்ளது
பார்த்து வந்த அப்பா சொன்னார்கள்

புதிய வீடு கட்ட அம்மா ஆசைப்பட்டாள்.....

தோட்டம் போடலாம் என அண்ணன் ...

தனிக்குடித்தன ஆசை மதினி விதைத்தது....

போகிற இடத்தில் எல்லோருடனும்
சினேகமாய் இருக்க யாரும்
சொல்லித் தரவில்லையே?????

6 comments:

பா.ராஜாராம் said...

டேய் பயலே..

தொடங்கிட்டியா..?எவ்வளவு சந்தோசமாய் இருக்கு மக்கா!

வா..வா..

ரொம்ப பிடிச்சிருக்குடா கவிதை!

தொடர்ந்து எழுது..அந்த பயலும் வரும்படி சொல்லுடா!

வாழ்த்துக்கள் மக்கா!

அகநாழிகை said...

தெய்வா,
கவிதை நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா... போன வருஷமே ஆரம்பிச்சுட்டீங்களா...

இரண்டு வருடங்களில் இரண்டு கவிதைகள் (அதில் ஒன்று இரண்டு வரி!).

தொடர்ந்து எழுதுங்க தெய்வா.

நேசமித்ரன் said...

வாங்க மக்கா வாங்க
கவிதை நன்றாக இருக்கு
எழுதுங்க தொடர்ந்து
உங்களை அறிய ஏதுவா இருக்கும்

அன்பு நிறைய மக்கா

தெய்வா said...

ரொம்ப சந்தோஷம்..
முதல் கவிதைக்கு கிடைத்த பின்னூட்டம்..

@பா.ரா..
@அகநாழிகை
@சுந்தர்
@நேசமித்ரன்

நன்றி...

பா.ராஜாராம் said...

உனக்கும் பா.ரா.வா?

உன்னை என்னடா செய்யலாம் ராஸ்கல்?