Wednesday, January 20, 2010

தேர்த்திருவிழா




இன்று தேர்த்திருவிழா...
என்னென்னவோ எண்ணங்கள்
மனதைப் பின்னோக்கி ஓட்டிச்செல்ல...

சிறு வயதில் ஊரில் தேர்த்திருவிழா...
அரைநாள் லீவு கிடைக்கிற உற்சாகம்

தேர்பார்த்து தொட்டிழுக்கிற சந்தோஷம்
மிட்டாய் வாங்க காசு கிடைக்கும் சௌகர்யம்
பலூன்கள், பம்பரங்கள், பித்தர்கள்...
புத்தாடைகள்...

கொஞ்ச நாள் பின்
கூட்டம் பார்க்கிற மதமதப்பு...
சுதந்திரமாய் நெரிசலூடே
சுற்றித் திரிகிற பரபரப்பு...

தேரை இழுத்து கோஷம் போடும்
இளமையின் வீர்யம்...

இன்றும் ஊரில் தேர்த்திருவிழா...
நான் என் மகளுக்கு
பலூன் வாங்கித் தருகிற சந்தோஷத்துடன்...

4 comments:

S.A. நவாஸுதீன் said...

ஒரே கவிதையில் வாழ்க்கையின் மூன்று முக்கிய நிலைகள். எதார்த்தம்.

பா.ராஜாராம் said...

நல்லாருக்குடா தெய்வா.

தெய்வா said...

@நவாஸுதீன்

உங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி..

@ராஜாராம்
அன்புடன்...

Unknown said...

LAST LINE OF BOTH POEMS ARE VERY CLASSICAL