Thursday, January 14, 2010

தேடல்

திருவிழாக் கூட்டத்தில்
தொலைந்து போன
குழந்தையைத் தேடுவது போல
நான்
இழந்து போன
சந்தோஷங்களைத் தேடுகிறேன்......

நானும் நீயும் துண்டைவிரித்து
மீன் பிடித்த சந்தோஷம்...

மிதிக்கமுடியாமல் சைக்கிளை மிதித்து
முள்செடியில் விழுந்த சந்தோஷம்...

பக்கத்து வீட்டுச் சுவரேறி
மாங்காய் அடித்த சந்தோஷம்...

கல்லூரியில் கட் அடித்து
சினிமா பார்த்த சந்தோஷம்...

வேலை கிடைத்த சந்தோஷம்...
இன்ன பிற சந்தோஷங்கள்.....

இப்ப
தேடுவதே சந்தோஷமாய்
தொடர்கிறது.....

5 comments:

S.A. நவாஸுதீன் said...

இழந்தாலும் இறக்காத நினைவுகள். தேடலிருக்கும்வரை சந்தோசம் தொடரும்.

தெய்வா said...

இவ்வளவு விரைவில் பின்னூட்டம்...
இணைய உலகில் மாத்திரமே இது சாத்தியம்...
நன்றியுடன்...

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்குடா தெய்வா பயலே..

குமார்ஜியும் பிளாக் திறந்துட்டான் போல..பார்த்தியா?

முதல் கவிதை,மிக அற்புதமா போட்டுருக்கான்.

ரொம்ப சந்தோசமாய் இருக்குடா..கல்யாண வீடு மாதிரி.

ப்ரபா மட்டும் பாக்கி.இல்லையா?..நல்லா தேடுங்கடா.அதுவும் ஒரு பிளாக் வச்சிருக்க போகுது..

:-)

இந்த சிரிப்பில் நிறைய சந்தோசமும்,கொஞ்சம் வலியும் இருக்குடா.ப்ரபா இன்னும் காணோமே என்கிற வலி.

பார்க்கலாம் மக்கா...

Sakthi said...

nice

Unknown said...

VERY NICE.